நண்பர்களுடன் நண்பேன்டா ஆடியோவை வெளியிடும் உதயநிதி

29e1b000-3665-4392-92aa-701bcf6daa86_S_secvpfஉதயநிதி ஸ்டாலின்-நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘நண்பேன்டா’. இப்படத்தில் சந்தானமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜெகதீஷ் இயக்கியுள்ள இப்படத்திற்கு உதயநிதியின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பாடல்களை வருகிற டிசம்பர் 23-ந் தேதி வெளியிடவுள்ளனர். இந்நிலையில், இந்த ஆடியோ வெளியீட்டில் நடிகர் சூர்யா, ஆர்யா உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்ளவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

டிசம்பர் 23-ந் தேதி மாலை 6.45 மணிக்கு தேவி திரையரங்கில் நடைபெறும் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் முன்னிலையில் நடிகர் சூர்யா ஆடியோவை வெளியிட ஆர்யா அதை பெற்றுக் கொள்கிறார். மேலும், படத்தின் டிரைலரை உதயநிதி ஸ்டாலினை அறிமுகப்படுத்திய இயக்குனர் ராஜேஷ் வெளியிடுகிறார். இந்த செய்தியை உதயநிதி ஸ்டாலின் உறுதிபடுத்தியுள்ளார்.

சூர்யா, உதயநிதி தயாரிப்பில் வெளிவந்த ‘ஆதவன்’ படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். அன்றுமுதல் இன்றுவரை இருவரும் நட்புடன் பழகி வருகின்றனர். ஆர்யா, உதயநிதி நடித்த ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் நட்புக்காக ஒரு காட்சியில் நடித்துக் கொடுத்தார். இவரும் உதயநிதிக்கு நெருங்கிய நண்பர் என்பதால், நண்பர்களுடன் இணைந்து ‘நண்பேன்டா’ ஆடியோவை வெளியிடுகிறார் உதயநிதி.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries