மாமனார் மருமகன் உறவைச் சொல்லும்

1419330886-4416முத்தையா இயக்கியிருக்கும் கொம்பன் படத்தை பொங்கலுக்கு வெளியிடுவது என முடிவு செய்து அறிவித்தும் விட்டனர். என்னை அறிந்தால் பொங்கலுக்கு வெளியாகாது என்ற நம்பிக்கையில்.

ஆனால் என்னை அறிந்தால் பொங்கலுக்கு கண்டிப்பாக வெளியாகும் என்பதால் கொம்பன் வெளியீட்டை தள்ளி வைக்க முடிவு செய்துள்ளனர்.

கடா மீசை வைத்து கார்த்தி நடித்திருக்கும் இந்தப் படத்தில் மாமனார் மருமகன் உறவை பிரதானமாக சொல்லியிருக்கிறார்களாம். மாமனார் ராஜ்கிரண், மருமகன் கார்த்தி.

லட்சுமி மேனன் ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில் கோவை சரளா தனது கெட்டப்பை மாற்றி அம்மா வேடத்தில் நடித்துள்ளார். ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயனையும் ஒரு வேடத்தில் நடிக்க வைத்துள்ளார்கள்.

முத்தையா இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries