பாகுபலி படத்திற்காக 6 கிலோ எடை குறைத்த தமன்னா

e40e3c13-7ebc-43a3-bb73-99068f122c37_S_secvpfதமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் தயாராகும் பிரம்மாண்ட சரித்திர படம் பாகுபலி. ‘மகதீரா’, ‘நான் ஈ’, ஆகிய படங்கள் மூலம் பிரபலமான ராஜமவுலி இப்படத்தை இயக்குகிறார்.

பாகுபலி படத்தில் ராணா, அனுஷ்கா, ரம்யாகிருஷ்ணன், சத்யராஜ் போன்றோரும் நடிக்கின்றனர். கடந்த வருடம் ஜூலை மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.

தமன்னாவுக்கு இதில் சண்டைக் காட்சிகள் உள்ளன. இதற்காக 6 கிலோ எடை குறைத்துள்ளார். இதுகுறித்து தமன்னா கூறியதாவது:– நிறைய படங்களில் ரசிகர்கள் என்னை கவர்ச்சியாக பார்த்துள்ளனர். பாகுபலி படத்தில் வித்தியாசமான கேரக்டரில் வருகிறேன்.

இதில் அவந்திகா என்ற கேரக்டரில் நடிக்கிறேன். நகைகள், காஸ்ட்யூம்கள் எல்லாமே சரித்திர காலத்தை பிரதிபலிக்கும். இந்த கேரக்டருக்காக எடை குறைக்கும்படி டைரக்டர் ராஜமவுலி கேட்டுக் கொண்டார். அதை ஏற்று கடும் பயிற்சிகள் செய்தேன். உணவு கட்டுப்பாட்டிலும் இருந்தேன். தற்போது ஆறு கிலோ எடை குறைத்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த படத்தில் தமன்னா, குதிரை சவாரி செய்யும் காட்சிகளிலும் நடிக்கிறார். இதற்காக குதிரையேற்றம் பயிற்சிகளும் எடுத்தார். ஆபத்தான சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடித்துள்ளாராம். திரையுலக வாழ்க்கையில் பாகுபலி முக்கிய படமாக இருக்கும் என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries