கே.பி.யின் இழப்பு ஈடு செய்ய முடியாதது – நடிகர் சங்கம் இரங்கல்

1419394078-0063கே.பாலசந்தர் மறைவுக்கு தென் இந்திய நடிகர் சங்கம் சார்பில் நடிகர் சங்க தலைவர் ஆர்.சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது் –
இந்திய திரையுலகின் ஜாம்பவான்களில் ஒருவரான கே.பி. என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்பெற்ற இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர், தனது கலைப்பயணத்தை தஞ்சை தரணியில் திண்ணை நாடகங்களில் ஆரம்பித்து மத்திய அரசு பணியில் அமர்ந்து மேடை நாடகங்கள் மூலமாக தனக்கென்று ஒரு தனி பாணியை ஏற்படுத்திக்கொண்டவர். இவரது மேடை நாடகங்கள் அந்தக்காலத்தில் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது.

பின்னர் தமிழ் திரையுலகில் தனி முத்திரையை பதித்தவர். இன்றுவரை தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறக்கும் பல நட்சத்திரங்களை உருவாக்கியவர் கே.பாலசந்தர். தென்னிந்திய தொழிலாளர்களின் நலன்களில் பெரும் அக்கறை செலுத்தினார்.

கே.பாலச்சந்தரின் மறைவு இந்திய திரையுலகத்துக்கு ஈடுசெய்யமுடியாத இழப்பாகும். அவரை பிரிந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களது அஞ்சலியை தெரிவித்து கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries