பாலச்சந்தரின் மறைவு இந்திய சினிமாவிற்கு பேரிழப்பு: அமீர்கான்

Balachander-Aamir-Khanதமிழ் சினிமாவின் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் மறைவுக்கு பாலிவுட் நடிகர் அமீர்கான் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது;

‘கே.பாலச்சந்தர் அவர்களின் மறைவு தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய சினிமாவுக்கும் பேரிழப்பு. சினிமா துறைக்கு அவர் ஆற்றியுள்ள சேவை மகத்தானது. என்னிடம் அவர் காட்டிய பெருந்தன்மையும், அரவணைப்பும் என்றும் என் நினைவில் நீங்காமல் நிலைத்திருக்கும்.

மிகுந்த பணிவு கொண்ட பெரியவர் அவர். என்னுடைய 25 வருட சினிமா வாழ்வில் அவருடன் கலந்துரையாடிய மாலை பொழுதை என்றும் என்னால் மறக்க இயலாது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது இதயப்பூர்வமான இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries