தனுஷுடன் ஜோடி சேரும் சமந்தா

ce387217-0f19-45e5-8b2e-7eddfb07842e_S_secvpfதனுஷ் நடிப்பில் இந்த வருடம் வெளியாகி 100 நாட்களை கடந்து வெற்றி பெற்ற படம் ‘வேலையில்லா பட்டதாரி’. இதில் தனுசுக்கு ஜோடியாக அமலாபால் நடித்திருந்தார். இப்படத்தை வேல் ராஜ் இயக்கியிருந்தார். அனிருத் இசையமைத்திருந்தார்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து வேல்ராஜ், தனுஷ், அனிருத் கூட்டணியில் புதிய படம் உருவாக இருக்கிறது. இதில் தனுஷுக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. தற்போது இப்படத்தில் சமந்தாவும் நடிக்க இருப்பதாக தனுஷ் கூறியிருக்கிறார்.

தனுஷுடன் முதன் முறையாக சமந்தா, எமி ஜாக்சன் நடிக்கிறார்கள். இப்படம் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு 2015-ம் ஆண்டும் பிப்ரவரி மாதம் தொடங்க இருக்கிறது.

தனுஷ் தற்போது பாலாஜி மோகன் இயக்கிவரும் ‘மாரி’ படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries