இரண்டாம் உலகப் போரின் போது உயிர் பிழைத்தவரின் கதை: எஞ்சலினா ஜோலி இயக்கிய படம் ஜன.2-ல் ரிலீஸ்

6cdcab54-a74a-4010-98c5-66aba448675b_S_secvpfஇரண்டாம் உலகப் போரின் போது சண்டையில் ஈடுபட்டு, விசாரணைக் கைதியாக பிடிபட்ட முன்னாள் ஒலிம்பிக் வீரர் லூயிஸ் ஸம்பெரினி என்பவரின் வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய உண்மை சம்பவங்களை மையப்படுத்தி கடந்த 2010-ம் ஆண்டு வெளியான ஆங்கில நாவல் பரபரப்பாக விற்பனையானது.

இந்த நாவலை மையமாக வைத்து ஹாலிவுட்டின் பிரபல கதாநாயகிகளில் ஒருவரான ஏஞ்சலினா ஜோலி, ‘அன்புரோக்கன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் லூயிஸ் ஸம்பெரினியின் கதாபாத்திரத்தில் ஜேக் ஓ கான்னெல் நடித்துள்ளார்.

இந்தப் படத்தை இந்தியாவில் திரையிடும் உரிமையை யூனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இந்தப் படத்தை இந்தியாவில் உள்ள முக்கிய பெருநகரங்களில் ஜனவரி 2-ம் தேதி திரையிட இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஏஞ்சலினா ஜோலி இயக்கிய இரண்டாவது படம் ‘அன்புரோக்கன்’ என்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries