தனுஷுடன் இணைந்து நடிக்கும் சதீஷ்

c7f906f5-df37-426d-af61-7e6d5073cfb5_S_secvpfதனுஷ் நடிப்பில் இந்த வருடம் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘வேலையில்லா பட்டதாரி’. இதில் தனுசுக்கு ஜோடியாக அமலாபால் நடித்திருந்தார். இப்படத்தை வேல்ராஜ் இயக்கியிருந்தார். அனிருத் இசையமைத்திருந்தார்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து வேல்ராஜ், தனுஷ், அனிருத் கூட்டணியில் புதிய படம் உருவாக இருக்கிறது. இதில் தனுஷுக்கு ஜோடியாக எமி ஜாக்சன் மற்றும் சமந்தா நடிக்கிறார்கள்.

இவர்கள் இருவரும் முதன் முறையாக தனுஷுடன் இணைந்து நடிக்கிறார்கள். தற்போது இப்படத்தில் சதீஷும் இவர்களுடன் இணைந்திருக்கிறார்.

இவர் ஏற்கனவே தனுஷ் தயாரித்த எதிர் நீச்சல் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு நண்பனாக நடித்திருக்கிறார். மேலும் மான் கராத்தே, கத்தி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு 2015-ம் ஆண்டும் பிப்ரவரி மாதம் தொடங்க இருக்கிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries