ஐ பட புரமோஷனுக்காக சல்மான்கானுடன் இணையும் விக்ரம் – எமி ஜாக்சன்

25db8711-021f-46ad-af98-22c760dc00ef_S_secvpfஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள பிரம்மாண்ட படம் ‘ஐ’. இப்படத்தின் பாடல்களும், டிரைலரும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஐ படத்தின் டீசரை யூடியூப்பில் பார்த்தவர்களின் எண்ணிக்கை 1 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. மேலும் படத்தின் டிரைலரை 40 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர்.

படத்தின் ஆடியோ வெளியீட்டுக்கு ஹாலிவுட் நடிகர் அர்னால்டை வரவழைத்து, பெரிய அளவில் விளம்பரப்படுத்தினர்.

இந்நிலையில், படம் பொங்கலுக்கு வெளியாவது உறுதியாகியுள்ள நிலையில், தற்போது படத்தை விளம்பரப்படுத்துவதற்கான முயற்சிகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர் படக்குழுவினர்.

முதற்கட்டமாக, சல்மான் கான் இந்தி தொலைக்காட்சியில் நடத்திக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் விக்ரமும், நடிகை எமிஜாக்சனும் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

சல்மான் கான் நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சி பாலிவுட்டில் மிகவும் பிரபலமடைந்த நிகழ்ச்சியாகும். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதன் மூலம் ஐ படத்துக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கும் என படக்குழுவினர் எதிர்பார்க்கின்றனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries