தனுஷின் மாரி படத்தின் புதிய போஸ்டர் இன்று நள்ளிரவு வெளியீடு

e236af27-2ad7-40d1-a9a1-80131a8b3370_S_secvpf‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘வாயை மூடி பேசவும்’ ஆகிய படங்களை இயக்கிய பாலாஜி மோகன் தனுஷை வைத்து இயக்கி வரும் புதுப் படம் ‘மாரி’.

இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும், இப்படத்தில் பின்னணி பாடகரான விஜய் யேசுதாஸ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறாராம்.

இப்படத்தை தனுஷின் ‘வுண்டர்பார் பிலிம்ஸ்’ நிறுவனமும், ராதிகா சரத்குமாரின் ‘மேஜிக் பிரேம்ஸ்’ நிறுவனமும் இணைந்து பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவை செய்கிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியானது. இதில் வித்தியாசமான தோற்றத்தில் தனுஷ் இடம் பெற்றிருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் புதிய போஸ்டரை இன்று நள்ளிரவு வெளியிட உள்ளனர். இதை தனுஷின் ‘வுண்டார்பார் பிலிம்ஸ்’ நிறுவனம் அறிவித்துள்ளது. புத்தாண்டு தொடக்கத்தில் தனுஷின் போஸ்டர் வெளியாகவிருப்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries