நானும் ரௌடிதான் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு

f41047d4-d583-4a0a-9960-dffcab3a9808_S_secvpfதனுஷ் தனது ‘வுண்டர்பார்’ நிறுவனம் மூலம் விஜய் சேதுபதியை வைத்து ‘நானும் ரௌடிதான்’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் இவர்களுடன் ராதிகா, ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்தை ‘போடாபோடி’ படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் தொடங்கியது. இதில் விஜய் சேதுபதி, நயன்தாரா, ராதிகா கலந்துக் கொண்டு நடித்தனர்.

தற்போது இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துள்ளனர். அடுத்த கட்டமாக சென்னையின் முக்கிய இடங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இப்படக்குழுவினருடன் தற்போது ஆனந்த் ராஜும் இணையவுள்ளார். இதில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

முக்கியமான வில்லன் கதாபாத்திரம் இல்லையென்றாலும், ஆனந்த்ராஜின் கதாபாத்திரம் படத்தில் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவை செய்து வருகிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries