அஜீத் பிறந்த நாளில் வெளியாகும் சிவகார்த்திகேயன் படம்?

0e303b76-2486-4038-b662-2471a4ee6d2e_S_secvpfசிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘காக்கி சட்டை’. இதில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்திருக்கிறார். துரை செந்தில் குமார் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது. இதன் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்காக காத்திருக்கிறது. பொங்கல் தினத்தன்று இப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு பின் வாங்கியுள்ளது.

இப்படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் ‘ரஜினி முருகன்’. பொன்ராம் இப்படத்தை இயக்கி வருகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கும் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

இமான் இசையமைத்து வரும் இப்படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரித்து வருகிறது. விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் இப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் சூரி, சமுத்திரகனி, ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

இப்படம் அஜீத் பிறந்த தினமான மே மாதம் 1ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடிப்பில் மே 1ம் தேதி ‘எதிர்நீச்சல்’ படம் வெளியானது.

இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட்டானது. அதே போல் இப்படமும் அந்நாளில் வெளியாவதால் மிகுந்த வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries