அனேகன் டிரைலர் ஜனவரி 7-ம்தேதி ரிலீஸ்

d8f0c8f7-a80e-457a-89f3-c0b92b05e664_S_secvpfகே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் ‘அனேகன்’. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அமிரா தஸ்தூர் நடித்திருக்கிறார்.

மேலும், கார்த்திக் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

காதல் கதையை மையமாக வைத்து இப்படம் உருவாகியிருக்கும் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியானது. இது ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.

குறிப்பாக ‘டங்கா மாரி…’ பாடல் பட்டி தொட்டி எங்கும் எதிரொலித்து வருகிறது. டீசரை பார்த்த அனைவரும் டிரைலர் எப்போது வெளியாகும் என்று கே.வி.ஆனந்தை கேட்டு வருகின்றனர்.

அதற்கு கே.வி.ஆனந்த், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்ஜும், எடிட்டர் ஆண்டனியும் அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தில் பிசியாக இருக்கின்றனர். ஆதலால் அனேகன் டிரைலரை ஜனவரி 7-ம்தேதி வெளியிடுகிறேன் என்று கூறியுள்ளார்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries