ஜோதிகா படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

284c10a3-3f3a-4ec9-a168-12ab7951aa30_S_secvpfநடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு, நடிகை ஜோதிகா நடிப்புக்கு முழுக்கு போட்டு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். இந்நிலையில், மலையாளத்தில் வெளியாகி பெரிய அளவில் வெற்றியடைந்த ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ படத்தை தமிழில் ரீமேக் செய்ய முயற்சிகள் நடந்து வந்தது.

இதில், மலையாளத்தில் மஞ்சுவாரியார் நடித்த கதாபாத்திரத்தில் நடிகை ஜோதிகாவை நடிக்க வைக்க படக்குழுவினர் முயற்சி செய்தனர். மலையாளத்தில் திலீப்பை திருமணம் செய்துகொண்ட மஞ்சுவாரியர் இந்த படத்தின் மூலம்தான் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி ஆனார்.

அதேபோல், இந்த படத்திலும் ஜோதிகாவை நடிக்க வைத்து அவருக்கு ரீ-என்ட்ரி கொடுத்துவிடலாம் என்ற படக்குழுவினரின் கடும் முயற்சிக்கு வெற்றி கிடைத்தது. இப்படத்தில் நடிப்பதாக ஜோதிகாவும், அதற்கு சூர்யாவும் சம்மதம் தெரிவித்து ஒப்புதல் கொடுத்தனர்.

இதையடுத்து, இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. சமீபத்தில் டெல்லியில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பிலும் ஜோதிகா கலந்துகொண்டார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, இறுதிக்கட்டப் பணிகளில் தீவிரமாக ஈடுபட உள்ளனர். கோடை விடுமுறையில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழில் ரீமேக் ஆகும் இப்படத்தை மலையாளத்தில் இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கி வருகிறார். படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. சூர்யா தனது 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries