ஐ படத்திற்கு தடையா?: ஆஸ்கார் ரவிச்சந்திரன் விளக்கம்

7619789a-4253-4a70-93cd-08e7cffa9224_S_secvpfவிக்ரம்-எமிஜாக்சன் நடிப்பில் ஷங்கர் இயக்கியிருக்கும் பிரம்மாண்ட படம் ‘ஐ’. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஆஸ்கார் பிலிம்ஸ் சார்பாக ஆஸ்கார் ரவிச்சந்திரன் அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறார்.

சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து ரிலீசுக்கு நீண்ட நாட்களாக காத்திருக்கிறது.

முதலில் இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்பட்டது. பட வேலைகள் முடியாததால் தள்ளிபோனது. பின்னர் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என்று கூறப்பட்டது.

அப்போதும் வெளியாகவில்லை. அதன் பின் பொங்கல் தினத்தன்று படம் கண்டிப்பாக வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டது.

இந்நிலையில் ஐ படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற செய்திகள் இணைய தளத்தில் பரவத் தொடங்கியது. பொங்கல் தினத்தன்று வெளியாகாது என்றும் இம்மாதம் 30ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டது.

இதுகுறித்து ஐ படத் தயாரிப்பாளரான ஆஸ்கார் ரவிச்சந்திரனிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்கும் போது, ஐ படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து விட்டது. திட்டமிட்டப்படி ஜனவரி 14-ம் தேதி வெளியாகும் என்று தெரிவித்தார்.

மேலும் ஐ படத்தை தடை செய்ய வேண்டும் என்று கூறியவர்களிடம் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம். ஆகையால் ஐ படம் குறிப்பிட்ட நாளில் எந்தவித சிக்கலும் இல்லாமல் வெளியாகும் என்று கூறினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries