சித்தார்த்- ஆர்யாவுடன் இணைந்து நடிக்கும் பாபி சிம்ஹா

67b2a8ad-098c-4fb2-85c8-3c2e26bc2416_S_secvpfதுல்கர் சல்மான், பஹத் பாசில், நிவின் பாலி, நஸ்ரியா நஸீம், பார்வதி மேனன் என நட்சத்திரக் கூட்டங்கள் நடித்து மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய படம் ‘பெங்களூர் டேஸ்’. இப்படத்தை அஞ்சலி மேனன் என்ற இளவயது பெண் கதை எழுதி இயக்கியிருந்தார். அன்வர் ரஷீத் தயாரித்திருந்தார்.

சென்ற வருடம் வெளியாகிய இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இன்றைய இளைய சமூகத்திற்கேற்றாற்போல், அவர்களுடைய நிஜ வாழ்க்கையில் நடக்கின்ற சம்பவங்களை திரையில் புதிய அனுபவத்தை பெங்களூர் டேஸ் கொடுத்திருக்கிறது.

தற்போது இப்படம் தமிழில் ரீமேக் ஆகவுள்ளது. பி.வி.பி. சினிமா நிறுவனமும், பிரபல தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர், விநியோகஸ்தரான தில் ராஜுவும் இப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி தமிழ், தெலுங்கில் தயாரிக்கவுள்ளார்கள்.

தமிழில் வெளிவந்த சந்தோஷ் சுப்ரமணியம் படத்தின் தெலுங்கு பதிப்பை இயக்கிய பாஸ்கர் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் இயக்கவுள்ளார்.

இதில் சித்தார்த், சமந்தா இருவரும் பஹத் பாசில்-நஸ்ரியா நஸீம் கதாபாத்திரத்திலும், ஆர்யா-நித்யா மேனன் இருவரும் துல்கர் சல்மான்-பார்வதிமேனன் கதாபாத்திரத்திலும் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

தற்போது இவர்களுடன் பாபி சிம்ஹா நடிக்கவுள்ளார். இவர் நிவின் பாலி நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கி நான்கு மாதத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries