இது நம்ம ஆளு டப்பிங் பணியில் நயன்தாரா!

fd3453e1-1c5c-41e9-b5f1-7c5b46037a1a_S_secvpfசிம்புவுடன் மீண்டும் இணைந்து நயன்தாரா நடித்து வரும் படம் ‘இது நம்ம ஆளு’. இப்படத்தை பசங்க படத்தை எடுத்த பாண்டிராஜ் இயக்கி வருகிறார். தங்களுடைய காதல் பிரிவிற்கு பிறகு இருவரும் சேர்ந்து நடிக்கும் படம் என்பதால் இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இப்படத்தை சிம்பு தனது சொந்த நிறுவனமான சிம்பு சினி ஆர்ட்ஸ் மூலம் தயாரித்து வருகிறார். இப்படத்தின் மூலம் சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

இப்படத்தின் புகைப்படங்கள் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், வரும் பொங்கலுக்கு இப்படத்தின் டிரைலரை வெளியிடவுள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் டப்பிங் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், நயன்தாரா கலந்துகொண்டு, அவர் சம்பந்தப்பட்ட டப்பிங் பணிகளை பேசிக் கொடுத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்ட நிலையில், இன்னும் இரண்டு பாடல்கள் மட்டுமே படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. வரும் மே மாதத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries