பாபி சிம்ஹாவுடன் இணையும் டார்லிங் நாயகி

90a15017-5b99-4299-b323-5fe9ad291a0e_S_secvpfஇசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வரும் பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் படம் ‘டார்லிங்’. இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்திருப்பவர் நிக்கி கல்ராணி.

இப்படத்திற்கு பிறகு பாபி சிம்ஹா நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து, நிக்கி கல்ராணி கூறும்போது, பாபி சிம்ஹாவின் ஜிகர்தண்டா படத்தை பார்த்துள்ளேன். அதில், அவருடைய நடிப்பை பார்த்து அப்படியே மயங்கிவிட்டேன்.

அவருடன் இணைந்து நடிப்பது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. இந்த படத்தில் பக்கத்து வீட்டு பெண்ணாக நடிக்கிறேன். இப்படத்தை பற்றி எல்லா விஷயங்களையும் சொல்ல முடியாது. இருந்தாலும், இப்படத்தில் அரசியல் சாயம் இருக்கும் என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன் என்று கூறினார்.

பாபி சிம்ஹா-நிக்கி கல்ராணி இணையும் அந்த படத்தை மதிவாணன் என்ற புதுமுக இயக்குனர் இயக்குகிறார். இவர் கே.வி.ஆனந்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இப்படத்தின் படப்பிடிப்பை வருகிற மார்ச் மாதத்தில் தொடங்கவுள்ளனர். முதல்கட்ட படப்பிடிப்பை சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் படமாக்கவுள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries