பறக்கும் விமானத்தில் திரிஷா திருமணம்?: பரபரப்பு தகவல்

80544c65-f359-4b15-9236-2fab8f49f0e7_S_secvpfதிரிஷாவுக்கு திருமணம் முடிவாகியுள்ளது. ‘வாயை மூடி பேசவும்’, ‘காவியத்தலைவன்’ போன்ற படங்களை தயாரித்த வருண்மணியனை மணக்கிறார்.

இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் வருகிற 23-ந்தேதி சென்னையில் நடக்கிறது. இதனை திரிஷாவே டுவிட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறார்.

நெருங்கிய உறவினர்கள் மட்டுமே நிச்சயதார்த்ததுக்கு அழைக்கப்பட உள்ளனர். 25-ந்தேதி நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினருக்கு திரிஷாவும் வருண்மணியனும் இணைந்து பிரத்யேக விருந்து அளிக்கின்றனர்.

கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. உயர்ரக உணவு வகைகள் இதில் பரிமாறப்படுகின்றன. திருமணம் மார்ச் மாதம் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பறக்கும் விமானத்தில் திருமணத்தை நடத்த யோசிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் திரிஷாவும் வருண்மணியனும் தனி விமானத்தில் இந்தியாவை சுற்றி வந்தனர்.

ஆக்ரா சென்று தாஜ்மகாலையும் கண்டுகளித்தார்கள். எனவே விமானம் ஒன்றை வாடகைக்கு பிடித்து திருமணத்தை நடத்த பரிசீலிப்பதாக கூறப்படுகிறது.

திரிஷா நடித்த ‘என்னை அறிந்தால்’ படம் வருகிற 29-ந்தேதி வெளியாகிறது. ஜெயம் ரவியுடன் நடித்த ‘பூலோகம்’ படம் முடிவடைந்து ரிலீசுக்கு காத்து இருக்கிறது. மேலும் இரண்டு படங்கள் கைவசம் உள்ளன.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries