21ம் தேதி சென்சாருக்கு செல்லும் அஜீத்தின் என்னை அறிந்தால்

5b278d2f-47d4-4979-b9e3-0da19121b358_S_secvpfஅஜீத் நடிப்பில் தற்போது திரைக்கு வர காத்திருக்கும் படம் ‘என்னை அறிந்தால்’. கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக அனுஷ்கா, திரிஷா நடித்திருக்கிறார்கள். மேலும் அருண் விஜய், விவேக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு டான் மெகதூர் ஒளிப்பதிவை செய்திருக்கிறார். விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு, இறுதிக்கட்ட பணியில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றும் யூடியூப்பில் சாதனை படைத்தும் வருகிறது.

அனைவரின் எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ள இப்படம் ஜனவரி 29-ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்தனர். அதற்கு முன் இப்படத்தை 21-ம் தேதி சென்சாருக்கும் அனுப்ப படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries