லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும் புதிய படம் அம்மிணி

005e2ee1-d4e1-4091-a91f-c7fff14066f4_S_secvpf‘ஆரோகணம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். இப்படத்தை தொடர்ந்து, அவர் ‘நெருங்கி வா முத்தமிடாதே’ என்ற படத்தையும் இயக்கியிருந்தார்.

இவ்விரு படங்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றதையடுத்து, தற்போது மீண்டும் ஒரு புதிய படத்தை இயக்க தயாராகிவிட்டார்.

இவர் இயக்கும் அந்த புதிய படத்திற்கு ‘அம்மிணி’ என்று பெயரிட்டுள்ளார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகவிருக்கும் இப்படத்தில் நடிப்பவர்கள் குறித்து இன்னும் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

இதுகுறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் கூறும்போது, என்னுடைய சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் ஒரு பெண் கலந்துகொண்டு, அவளது துயரங்களை என்னிடம் கூறினார்.

அந்த பெண்ணின் கதை என்னை மிகவும் ஈர்த்தது. அதை ஒரு படமாக எடுத்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்தேன். அந்த கதையை அடிப்படையாக வைத்து இப்படத்தை எடுக்கவிருக்கிறேன் என்றார்.

விரைவில் படம் குறித்த மற்ற தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries