பேத்தியுடன் ரசிகர்களை சந்தித்த அமிதாப்பச்சன்

9133c8aa-665d-4ec2-9869-82b4367e55c8_S_secvpfஅபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய் தம்பதியரின் மகளான ஆரத்யாவுக்கு மூன்று வயது ஆகிறது. ஆரத்யாவை பொது நிகழ்ச்சிகளுக்கு இதுவரை அழைத்து செல்லவில்லை.

வீட்டில் வைத்தே செல்லமாக வளர்க்கின்றனர். வெளிநாடுகளுக்கு ஐஸ்வர்யாராய் பயணப்படும்போது மகளையும் அழைத்து போனார்.

இந்த நிலையில் முதல் தடவையாக பேத்தி ஆரத்யாவை, அமிதாப்பச்சன் ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அழைத்து வந்தார். மும்பையில் உள்ள அமிதாப்பச்சன் வீட்டில் தினமும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரள்வது உண்டு. அவர்களை அமிதாப்பச்சன் தனியாக சென்று நேரில் சந்திப்பார்.

இந்த தடவை பேத்தி ஆரத்யாவையும் அழைத்து போனார். பேத்தியுடன் அமிதாப்பச்சனை பார்த்ததும் ரசிகர்கள் கைகளை அசைத்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். போட்டோவும் எடுத்துக் கொண்டார்கள்.

அமிதாப்பச்சன் பேத்தியை கையில் தூக்கி வைத்துக் கொண்டு ரசிகர்களை பார்த்து கையசைத்தார். பின்னர் இந்த படங்களை பேஸ்புக்கிலும் வெளியிட்டார்.

அமிதாப்பச்சன் இதுகுறித்து பேசும்போது, ‘‘ஆரத்யாவுடன் ரசிகர்களை சந்தித்தபோது எல்லோரும் வாழ்த்தினர். அது பெரிய பரிசாக அமைந்தது’’ என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries