அப்பாவி இளைஞனாக நடிக்கும் ஜி.வி.பிரகாஷ்

f01a12c4-3d83-4b93-a0f5-79634fadc69c_S_secvpfஇசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் தற்போது கதாநாயகனாக படங்களில் நடித்து வருகிறார். இவருடைய நடிப்பில் பொங்கலுக்கு ‘டார்லிங்’ படம் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.

ரசிகர்கள் மனதில் டார்லிங்காக வலம் வரும் ஜி.வி.பிரகாஷ் அறிமுக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘திரிஷா இல்லனா நயன்தாரா’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

இதில் ‘கயல்’ ஆனந்தியுடன் ஜோடி சேர்ந்து நடிக்கிறார். சமீபத்திய அறிமுகங்களில் மிக உன்னிப்பாக கவனிக்கப்படும் ஜி.வி.பிரகாஷ் குமாரும், ஆனந்தியும் இந்த படத்தில் இணைந்து இருப்பது இந்த படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரிக்க வைக்கிறது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் சமீபத்தில் வெளியானது. அந்த படத்தில் உள்ள ஜி.வி.பிரகாஷின் வித்தியாசமான கெட்-அப் பரவலாக பாராட்டுப் பெற்றது. வெளியான சிறிது நேரத்திலேயே அதிக நபர்களால் பகிரப்பட்டு டுவிட்டரில் டிரண்டிங்கும் ஆனது.

காமியோ பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் சி.ஜே.ஜெயகுமார் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியது. “ஒரு அப்பாவி இளைஞனின் காதலும் அதில் நடக்கும் முக்கியமான சம்பவங்களே ‘திரிஷா இல்லனா நயன்தாரா’ என்றார் இயக்குனர் ஆதிக்.

சென்னைக்கு அருகே உள்ள கெருகம்பாகத்தில் உள்ள ஒரு மாவு மில்லில் படப்பிடிப்பு துவங்கியது. படத்தின் தலைப்பை கேள்விப்பட்ட அந்த பகுதி மக்கள் திரிஷாவும், நயன்தாராவும் வந்திருப்பதாக நினைத்து பெருமளவில் கூடி விட்டனர்.

நடிகைகள் இருவரும் இல்லாதது அவர்களுக்கு சிறிதளவு ஏமாற்றம் தந்தாலும் ‘கயல்’ ஆனந்தியை பார்த்த அவர்கள், இந்தப் பொண்ணும் ரொம்ப அழகாத்தான் இருக்கா என்று பேசியவாறே கலைந்தனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries