மது, சிகரெட், சர்ச்சை வசனம் நீக்கம்: தனுஷ் படத்தில் 23 இடங்களில் வெட்டு

b77f6c11-8529-46a0-8872-e0215b221b2a_S_secvpfதனுஷ், அம்ரியா ஜோடியாக நடித்துள்ள படம் அனேகன். கே.வி. ஆனந்த் இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகிறது. படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைத்தனர்.

படம் பார்த்த தணிக்கை குழுவினர் நிறைய காட்சிகள் மற்றும் வசனங்களுக்கு ஆட்சேபம் தெரிவித்தனர். ‘யு’ சான்று தர முடியாது எனவும் மறுத்தனர்.

‘யு’ சான்றிதழ் கிடைக்காவிட்டால் வரி விலக்கு பெற முடியாது என்பதற்காக சர்ச்சை காட்சிகளை நீக்குவதற்கு படக்குழுவினர் ஒப்புக் கொண்டனர்.

இதையடுத்து 23 இடங்களில் வெட்டு விழுந்தது. ஒரு பாடல் காட்சியில் இடம் பெற்ற சிகரெட் பிடிக்கும் காட்சிகள் முற்றிலும் நீக்கப்பட்டன.

எங்கிட்ட வாய…. பொண்டாட்டிக்கு தான் தெரியும் என்ற வசனங்கள் நீக்கப்பட்டன. ‘ஆத்தாடி’ என்ற பாடலில் இடம் பெற்ற கவர்ச்சி காட்சிகள் நீக்கப்பட்டது. அதெல்லாம் தொந்தரவு பண்ணாதீங்க என்ற வசனமும் நீக்கப்பட்டது.

மேலும் சில பாடல்களில் இடம் பெற்ற ஆபாச காட்சிகளும் நீக்கப்பட்டது. முத்த காட்சியொன்றையும் நீக்கினார்கள். ரேப்தான் இந்தியாவோட நேஷனல் கேம் ஆயிடுச்சுடா என்ற வசனம் நீக்கப்பட்டது. தொடு வானம் என்ற பாடலில் இடம் பெற்ற முத்த காட்சி நீக்கப்பட்டது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries