என்னை அறிந்தால் ரன்னிங் டைம் தெரியுமா?

1417847279-1539என்னை அறிந்தால் அறிவித்தபடி ஜனவரி 29 வெளியாகுமா? ரசிகர்கள் நகம் கடித்து காத்திருக்க, படத்தின் நீளம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் வெளிவந்த பிரமாண்ட படங்கள் – கத்தி, லிங்கா, ஐ அனைத்துமே கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஓடக்கூடியவை. ஐ மூன்றுக்கும் மேலே.

இந்தப் படங்கள் ரசிகர்களுக்கு சுவாரஸியக் குறைவாக இருந்ததுக்கு இந்த அதிகபடி நீளமும் ஒரு காரணமாக அமைந்தது. ஆனால், கௌதம் அந்த விஷயத்தில் தெளிவு.

என்னை அறிந்தால் 2 மணி 32 நிமிடங்கள் மட்டுமே ஓடுகிறது. இது ஒரு சராசரி தமிழ்ப் படத்தின் நீளம். இது சென்சாருக்கு முந்தைய தகவல். சென்சாரில் ஏதாவது காட்சிகள் எடிட் செய்யப்பட்டால் அதற்கேற்ப நீளமும் குறையும்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries