மாஸ் அறிமுக பாடலை மாஸாக எடுத்திருக்கும் வெங்கட் பிரபு

ac21cdfd-9a58-4e38-8189-aa88dfbe3198_S_secvpf‘பிரியாணி’ படத்திற்கு பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் படம் ‘மாஸ்’. இப்படத்தில் சூர்யா-நயன்தாரா ஜோடியாக நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தூத்துக்குடியில் நடந்தது. அங்கு ஒரு பாடல் காட்சி ஒன்றை படமாக்கினர். அந்த பாடல் படத்தின் அறிமுகப் பாடல் என்று கூறப்படுகிறது.

மதன்கார்க்கி வரிகளில் ‘தெறிக்குது தெறிக்குது மாஸ், இது கன்னா பின்னா மாஸ், பறக்குது பறக்குது மாஸ், இது பக்கா பக்கா மாஸ்’ என்று அமைந்துள்ள இந்த பாடலில் சூர்யா, நயன்தாரா மற்றும் பிரேம்ஜி ஆகியோர் இணைந்து நடனமாடியுள்ளனர்.

இந்த பாடலுக்கு ஷோபி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். இந்த பாடல் படத்திற்கு பெரிய மாஸாக இருக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

வெங்கட் பிரபு தான் இயக்கும் படங்களில் ஏதாவது ஒரு காட்சியில் எப்படியாவது இடம்பெற்று விடுவார். அதுபோல், இந்த படத்திலும், குறிப்பிட்ட இந்த பாடலில் வெங்கட் பிரபு தோன்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries