டாஸ்மாக் கடையில் மது வாங்கும் காட்சியை கண்டித்து நடிகை நயன்தாரா உருவ பொம்மை எரிப்பு

7e307f8b-4315-4170-9e3e-4695a1a235ae_S_secvpfநடிகை நயன்தாரா டாஸ்மாக் கடைக்கு சென்று மதுபாட்டில் வாங்குவது போன்ற படம் சமூக வலை தலங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒரு சினிமா படத்தில் நடிப்பதற்காகவே அதுபோன்ற காட்சியில் நடித்ததாக நடிகை நயன்தாரா விளக்கம் அளித்திருந்தார். எனினும் அது கலாசார சீரழிவை ஏற்படுத்தும் வகையிலும், பெண்களை குடிப்பழக்கத்திற்கு தூண்டுவது போன்றும் அமைந்துள்ளதாக இந்து மக்கள் கட்சி உள்பட பல்வேறு அமைப்பினர் குற்றம்சாட்டினர்.

இந்த நிலையில் நயன்தாராவை கண்டித்து நேற்று வேலூர் டோல்கேட் அருகே இந்து மக்கள் கட்சியின் வேலூர் மாவட்ட இளைஞர் அணி சார்பில் அவரது உருவபொம்மையை எரித்து கோஷமிட்டனர்.

இதில் வேலூர் மாவட்ட இளைஞர் அணி தலைவர் சுதாகர், மாவட்ட செயலாளர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர். தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அதற்குள் உருவ பொம்மையை எரித்தவர்கள் அங்கிருந்து ஓடி விட்டனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries