வடிவேலு நடிக்கும் எலி படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு

1057d49b-f7d8-449f-af26-db01c59984b0_S_secvpfவடிவேலு நீண்ட இடைவெளிக்குப்பிறகு ‘தெனாலிராமன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி ஆனார். இப்படத்தில் மீனாட்சி தீக்‌ஷித் நாயகியாக நடித்திருந்தார்.

டி.இமான் இசையில் உருவாகியிருந்த இப்படத்தை யுவராஜ் இயக்கியிருந்தார். மன்னர் காலத்து கதையாக வெளிவந்த இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இப்படத்தை அடுத்து மீண்டும் யுவராஜ் இயக்கத்திலே புதிய படம் ஒன்றில் நடிக்க தொடங்கினார் வடிவேலு. இப்படத்திற்கு ‘எலி’ என்று பெயர் வைத்து படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.

இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்து வருகிறார். சிட்டி சினி கிரியேஷன்ஸ் சார்பாக ஜி.சதிஷ் குமார் தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. அதில் வடிவேலு வித்தியாசமான தோற்றத்தில் கார் மேல் படுத்திருப்பது போல் காட்சி அமைந்துள்ளது.

இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்று வருகிறது. சமூக வலைத் தளங்களிலும் வேகமாக பரவி வருகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries