ரொம்ப நாள் கழித்து நல்ல படம் பார்த்த திருப்தி: என்னை அறிந்தால் குறித்து சிம்பு டுவிட்

f0d90fb1-5c13-40c1-a846-ac270ab90f09_S_secvpfஅஜித் நடிப்பில் உருவான ‘என்னை அறிந்தால்’ இன்று உலகமெங்கும் வெளியானது. இந்த படத்தை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், அஜித்தின் தீவிர ரசிகரும், நடிகருமான சிம்பு ரொம்ப நாள் கழித்து நல்ல படம் பார்த்த திருப்தியை ‘என்னை அறிந்தால்’ கொடுத்துள்ளது என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நடிகர் சிம்பு, அஜித் படம் வெளியாகும் முதல் நாள் முதல் ஷோ பார்த்துவிடும் அளவுக்கு அஜித் மீது தீவிர பற்று உள்ளவர். இன்று வெளியான அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தையும் முதல் ஷோவை இசையமைப்பாளர் அனிருத்துடன் சென்று வெற்றி திரையரங்கில் பார்த்துவிட்டு, படம் குறித்த தனது கருத்தை டுவிட்டர் பக்கத்தில் சிம்பு வெளியிட்டுள்ளார்.

அவர் கூறும்போது, ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தி உள்ளது. தல அதிரடியான, யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். படம் செம மாஸாகாவும், கிளாஸாகவும் உள்ளது. தல ரசிகர்களுக்கு உண்மையான விருந்துதான் என்று தெரிவித்துள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries