மனிஷா கொய்ராலாவுடன் மீண்டும் சேரும் அர்ஜூன்?

8e6a5b91-b8c4-4871-a4ea-cb699917df58_S_secvpfஅர்ஜுன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ‘ஜெய்ஹிந்த்-2’. இப்படத்தை அவரே இயக்கி, நடித்திருந்தார். இப்படத்திற்கு பிறகு கன்னடத்தில் ‘கேம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை ஏ.எம்.ஆர்.ரமேஷ் என்பவர் இயக்கி வருகிறார். இவர் ‘வனயுத்தம்’, ‘சையனைடு’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர்.

இப்படத்தில் நடிப்பதற்காக அர்ஜுன், பாலிவுட் நடிகை மனிஷா கொய்ராலாவை படக்குழுவினருக்கு பரித்துரைத்துள்ளதாக செய்திகள் வெளிவந்தது.

அர்ஜூன்-மனிஷா கொய்ராலா இருவரும் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த ‘முதல்வன்’ படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். பாக்ஸ் ஆபீசில் ஹிட்டான இப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், மீண்டும் தன்னுடைய படத்தில் மனிஷா கொய்ராலாவை ஜோடியாக நடிக்க வைத்து பெரிய ஹிட் கொடுக்க அர்ஜூன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries