ஆபாச காமெடி நிகழ்ச்சி: தீபிகா படுகோனே, ரன்பீர்சிங் மீது வழக்கு

5f7e2ca7-d7e6-4dae-9d46-c9aab019cc38_S_secvpfநடிகர், நடிகைகள் ஒரே இடத்தில் கூடி ஆபாசமாக பேசுவது, செக்ஸ் காமெடிகள் சொல்வது, கலந்துரையோடுவது என்கிற ஏஐபி ரோஸ்ட் ஷோ நிகழ்ச்சி மும்பையில் பிரபலமாகி வருகிறது.

சமீபத்தில் இந்தி நடிகர் கரன்ஜோகர் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சி ஸ்டேடியம் ஒன்றில் நடந்தது. இதில் இந்தி நடிகர்கள் ரன்பீர்சிங், அர்ஜுன் கபூர் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். தீபிகா படுகோனோ பார்வையாளராக கலந்து கொண்டார்.

இதில் ஆபாச வார்த்தைகள் பரிமாறப்பட்டன. செக்ஸ் காமெடிகள் சொன்னார்கள். இந்த நிகழ்ச்சி இன்டர்நெட் யுடியூப்பில் வெளியானது. இதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டது.

இதுகுறித்து விசாரணை நடத்த மகராஷ்டிர அரசும் உத்தரவிட்டது. பண்ட்கார்டன் போலீசார் விசாரணை நடத்தி டைரக்டர் கரன்ஜோகர், நடிகர்கள் ரன்பீர்சிங், அர்ஜுன்கபூர், நடிகை தீபிகா படுகோனோ, காமெடி நடிகர் அதிஷ்மாத்யூ உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இது இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries