பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் திருமணம்: தொழிலதிபரை மணந்தார்

Singer-Shreya-Ghoshal-ties-the-knotதமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, பெங்காலி உள்ளிட்ட பல மொழிகளில் பின்னணி பாடகராக வலம் வருபவர் ஸ்ரேயா கோஷல். தமிழில் ‘ஆல்பம்’ படத்தில் ‘செல்லமே செல்லம் என்றாயடா’ என்ற பாடல் மூலம் அறிமுகமானவர்.

‘விருமாண்டி’ படத்தில் இளையராஜா இசையில் இவர் பாடிய ‘உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணுமில்ல’ என்ற பாடல் மிகவும் பிரபலமடைந்தது.

தொடர்ந்து, முன்னணி நடிகர்கள் மற்றும் முன்னணி இசையமைப்பாளர்களின் படங்களில் நிறைய பாடல்கள் பாடியுள்ளார். இவருடைய குரலில் தமிழில் கடைசியாக ‘ஐ’ படத்தில் ‘பூக்களே சற்று ஓய்வெடுங்கள்’ பாடல் மிகவும் பிரபலமானது.

இந்நிலையில், இவர் தற்போது திருமண வாழ்வில் அடியெடுத்து வைத்திருக்கிறார். தொழிலதிபரான சில்ஆதித்யா என்பவருக்கும், இவருக்கும் நேற்று இரவு திருமணம் நடைபெற்றதாக ஸ்ரேயா கோஷல் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இவர்களது திருமணத்தில் ஸ்ரேயா கோஷல்-சில் ஆதித்யா ஆகியோரின் குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டதாகவும் ஸ்ரேயா கோஷல் தெரிவித்துள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries