ஜெய்-திரிஷா இணையும் படத்தில் பிரபுதேவா?

4fdad032-a2db-4f6e-bc7c-312c1bf7bdaf_S_secvpf‘சமர்’, ‘நான் சிகப்பு மனிதன்’ ஆகிய படங்களுக்கு பிறகு திரு இயக்கும் பெயரிடப்படாத படத்தில் ஜெய்-திரிஷா ஆகியோர் நடிக்கவிருக்கின்றனர். இப்படத்தை திரிஷாவின் வருங்கால கணவர் வருண்மணியன் தயாரிக்கிறார்.

இப்படத்தில் பிரபுதேவா சிறப்புத் தோற்றத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. பிரபுதேவா இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம் ‘எங்கேயும் காதல்’. இப்படத்தில் ஒரு பாடலுக்கு பிரபுதேவா நடனமாடியிருந்தார்.

இப்படத்திற்கு பிறகு இந்தியில் படங்களை இயக்கும் பணியில் பிசியாகிவிட்ட பிரபுதேவா, தமிழில் எந்த படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை.

இந்நிலையில், இப்படத்தின் கதையை கேட்டதும் பிரபுதேவா கண் கலங்கியதாகவும், உடனடியாக இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுக்கிறார் பிரபுதேவா. மேலும், இப்படத்தில் நடிகை சிம்ரனையும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பை வருகிற மார்ச் மாதத்தில் தொடங்கவிருக்கின்றனர். சென்னை மற்றும் கும்பகோணத்தில் படப்பிடிப்பை நடத்தவுள்ளனர். தமன் இப்படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries