பிகே ரீமேக்கில் நடிக்கிறாரா கமல்?

6648e76e-6b32-4232-aec7-909f0efc92a0_S_secvpfஅமீர்கான் நடிப்பில் உருவான ‘பிகே’ படம் கடந்த வருடத்தின் இறுதியில் வெளியானது. ஆயிரக்கணக்கான தியேட்டர்களில் வெளியிடப்பட்ட இப்படம் ரூ.500 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதுவரை வெளியான பாலிவுட் படங்களின் சாதனைகளையெல்லாம் ‘பி.கே’ படம் முறியடித்ததாக கூறப்பட்டது.

படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டதிலிருந்து, படம் வெளியாகும்வரை பல்வேறு பிரச்சினைகளை சந்தித்த இப்படம் தற்போது தமிழிலும் ரீமேக் ஆக இருக்கிறது. தமிழில் ரீமேக் உரிமையை ஜெமினி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

‘பிகே’ படத்தின் தமிழ் ரீமேக்கில் உலக நாயகன் கமலஹாசன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஏற்கெனவே, ஜெமினி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்தியில் வெளியான ‘முன்னாபாய் எம்.பி.பி.எஸ்.’ படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பெற்று, ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.’ என்ற பெயரில் தமிழில் எடுத்தது. இந்த படத்தில் கமல் நடித்திருந்தார்.

இந்நிலையில், ஜெமினி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் ‘பி.கே.’ படத்தின் ரீமேக் உரிமையையும் வாங்கி வைத்துள்ளதால், கமலை நடிக்க வைக்கலாம் என முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் கமல் நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும் என்ற விமர்சனங்களும் எழுந்து வருகிறது. விரைவில், இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries