நானும் ரௌடிதான் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் பார்த்திபன்

37503edc-c9b0-43af-8094-4ba806ed468d_S_secvpfதனுஷ் தனது ‘வுண்டர்பார்’ நிறுவனம் மூலம் விஜய் சேதுபதியை வைத்து ‘நானும் ரௌடிதான்’ என்ற படத்தை தயாரித்து வருகிறார்.

இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் இதில் ராதிகா, ஆர்.ஜே.பாலாஜி, ஆனந்த்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து வருகின்றனர். தற்போது இவர்களுடன் பார்த்திபனும் இணைந்துள்ளார்.

பார்த்திபன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘கதை திரைக்கதை வசனம் இயக்கும்’ என்னும் படத்தை இயக்கியிருந்தார். இப்படம் கடந்த வருடம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடியது. அதன்பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘மாஸ்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தற்போது ‘நானும் ரௌடிதான்’ படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிப்பது ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நானும் ரௌடிதான் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவை செய்து வருகிறார். இப்படத்தின் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்னையின் முக்கிய இடங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries