அஜித்தின் என்னை அறிந்தால் முதல் 4 நாட்கள் வசூலில் ரூ.50 கோடியை தாண்டி சாதனை

7fcddd55-8870-4d45-8300-5811e4e32609_S_secvpfஅஜித் -திரிஷா ஜோடியாக நடித்த ‘என்னை அறிந்தால்’ படம் கடந்த 5-ந் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். உலகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான இப்படத்துக்கு ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ஆந்திர பாக்ஸ் ஆபீஸ் தகவலின் படி உலக அளவில் ‘என்னை அறிந்தால்’ 4 நாட்களில் ரூ 53.65 கோடியை தாண்டி உள்ளதாக கூறப்படுகிறது. முதல் வார முடிவில் ‘என்னை அறிந்தால்’ தமிழ்நாட்டில் ரூ. 31.25 கோடியும், கேரளாவில் ரூ. 2.75 கோடியும் கர்நாடகாவில் ரூ.1 கோடியும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

சர்வதேச பாக்ஸ் ஆபீசில் ‘என்னை அறிந்தால்’ ரூ. 15 கோடி வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக ஆஸ்திரேலியா, அமெரிக்காவில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது.

இங்கிலாந்தில் ஓரளவுக்கு இப்படம் ஓடி உள்ளது. முதல் வாரத்தில் அமெரிக்காவில் ‘என்னை அறிந்தால்’ ரூ. 3.10 கோடி வசூல் ஈட்டி உள்ளதாம். இதற்கு முன் வெளியான அனைத்து அஜித் படங்களின் வசூலையும் இது முறியடித்து உள்ளதாக கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியா- நியூசிலாந்தில் முதல் வாரம் ரூ. 90 லட்சம் வசூல் செய்து உள்ளதாம். இங்கிலாந்தில் முதல் வாரம் ரூ.1 கோடி வசூலை தாண்டி உள்ளதாம். மொத்தமாக வெளிநாடுகளில் மட்டும் இப்படம் ரூ. 15 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries