எம்.ஜி.ஆர். பாடலின் தலைப்பை சிம்பு படத்திற்கு வைத்த கவுதம் மேனன்?

db313087-88d7-461e-995e-79dc0ba82edb_S_secvpfஇயக்குனர் கவுதம் மேனன், அஜித்தை வைத்து படம் இயக்குவது உறுதி செய்யப்பட்டபோது, அஜித் ‘வீரம்’ படத்தில் பிசியாக இருந்தார். அஜித் வீரம் படத்தை முடிப்பதற்குள் சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்கிவிடலாம் என்று சிம்புவை வைத்து புதிய படமொன்றை இயக்க ஆரம்பித்தார் கவுதம் மேனன்.

இதன் படப்பிடிப்பு பாதியில் சென்று கொண்டிருக்கும்போதே அஜித் ‘என்னை அறிந்தால்’ படத்தில் நடிக்க தொடங்கிவிட்டதால், சிம்புவின் படத்தை கிடப்பில் போட்டுவிட்டு, அஜித் படத்தை இயக்கி வந்தார்.

தற்போது ‘என்னை அறிந்தால்’ வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், கிடப்பில் போட்ட சிம்பு படத்தை மீண்டும் இயக்க தயாராகிவிட்டார் கவுதம்மேனன்.

இந்த படத்திற்கு முதலில் ‘சற்றென்று மாறுது வானிலை’ என்று தனது முந்தைய படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் வரியை தலைப்பாக வைத்தார். தற்போது இப்படத்திற்கு ‘அச்சம் என்பது மடமையடா’ என்று பெயர் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

கவுதம் மேனன் தனது படங்களின் தலைப்பை எப்போதும் சுத்த தமிழில்தான் வைப்பார். ‘மின்னலே’ படம் முதல் கடைசியாக வெளிவந்த ‘என்னை அறிந்தால்’ படம் வரை அனைத்தும் தமிழ் பெயர்தான். இதில் சில தலைப்புகள் எம்.ஜி.ஆரின் பாடலின் முதல் வரிகள் அதிகம் இடம்பெறும்.

‘பச்சைக்கிளி முத்துச்சரம்’, ‘வேட்டையாடு விளையாடு’, இப்போது ‘உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்’ இந்த பாடலின் ஈர்ப்பாக ‘என்னை அறிந்தால்’ ஆகிய பெயர்களை வைத்திருந்தார். இந்த வரிசையில் தற்போது சிம்பு படத்திற்கும் எம்.ஜி.ஆர் பாடலின் முதல் வரியான ‘அச்சம் என்பது மடமையடா?’ என பெயர் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries