தனுஷூக்கு சிறப்பு வாய்ந்த பிப்ரவரி மாதம்

03bfbd58-63b3-4200-8364-2940f0477d1a_S_secvpfதமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷிற்கு இந்த பிப்ரவரி மாதம் ஸ்பெஷலான மாதமாக அமைந்திருக்கிறது.

இவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்துள்ள ‘ஷமிதாப்’ படம் கடந்த 6-ம் தேதி வெளியானது. இது வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இதையடுத்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்துள்ள ‘அனேகன்’ படம் 13-ம் தேதி வெளியாகவுள்ளது. இதில் தனுஷுக்கு ஜோடியாக அம்ரியா தஸ்தூர் நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். தனுஷின் நண்பரான சிவகார்த்திகேயனுக்கு வரும் 17-ம் தேதி பிறந்தநாள்.

மேலும் ‘அனேகன்’ படத்தின் தெலுங்கு பதிப்பு 20-ம் தேதி வெளியாகவுள்ளது. இதையடுத்து தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘காக்கி சட்டை’ படம் இம்மாதம் 27-ம் தேதி வெளியாகவுள்ளது.

இவ்வாறு சிறப்பு வாய்ந்த நிகழ்வுகள் நிகழ உள்ளதால், ஸ்பெஷல் பிப்ரவரி என்று தனுஷ் கூறியுள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries