படப்பிடிப்பில் நடிகை ஸ்ருதி பாலாவிடம் வம்பு செய்த செந்தில்

20614511-a6a7-4f2c-8875-2c58c14a6a47_S_secvpfகேரளத்து வரவாக வரும் நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் எப்போதும் ஒரு இடம் உண்டு. அந்த வரிசையில் தற்போது கேரளத்திலிருந்து மற்றுமொரு திறமைமிக்க நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார் ஸ்ருதிபாலா.

இவர் இயக்குனர் ஏ.வெங்கடேஷ் இயக்கி வரும் ‘ரொம்ப நல்லவன்டா நீ’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இப்படத்தில் ‘மிர்ச்சி’ செந்தில் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் ரோபோ சங்கர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்தில் நடித்ததை பற்றி ஸ்ருதி பாலா கூறும்போது, விளம்பர படங்கள் மற்றும் மாடலிங் செய்து கொண்டிருக்கும் பொழுது சினிமா வாய்ப்புகள் வந்தன.

சிறு வயது முதலே பாரம்பரிய நடனம் கற்று வந்ததால் நடிப்பு பாவங்கள் கொண்டு வருவது சுலபமாய் அமைந்தது. இருப்பினும் எனது முதல் படம் நல்ல கதையுடையதாய் இருக்க வேண்டும் என்று எண்ணினேன்.

அதற்கேற்றாற்போல் இயக்குனர் வெங்கடேஷ் இப்படத்தின் கதையை கூறினார். ‘அங்காடி தெரு’ படத்தில் படுபயங்கரமாய் வரும் ஆளாக இருப்பாரோ? என்று ஆச்சரியத்தில் இருந்தேன். இப்படத்தில் முழுக்க முழுக்க உதவியாய் இருந்தார்.

‘ரொம்ப நல்லவன்டா நீ’ நகைச்சுவை திரைப்படம். எனது கதாப்பாத்திரம் ஒரு தைரியமான படித்த பெண். செந்தில் எனக்கு ஜோடியாக வருகிறார்.

துளியும் அலட்டல் இல்லாத மனிதர். இருப்பினும், ஷூட்டிங் சமயத்தில் செந்தில், ரோபோ சங்கர் இருவரும் என்னை வம்பு செய்து கொண்டே இருப்பார்கள்.ரோபோ எப்பொழுதும் கலகலவென இருப்பார். அவர் இருந்தால் ஷூட்டிங் முழுவதும் மகிழ்ச்சியாய் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries