பாம்பு சட்டை படப்பிடிப்பை கிளாப் அடித்து தொடங்கி வைத்தார் ராதிகா

6fc43771-4f60-4ec7-b83b-657412e5ced2_S_secvpfபாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘பாம்பு சட்டை’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கியது. இதில் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு மற்றும் பொருளாளர் பைவ் ஸ்டார் கதிரேசன், இயக்குனர் கார்த்திக் சுபாராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று பாம்பு சட்டை குழுவினரை வாழ்த்தினர்.

பாபி சிம்ஹா, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் நடித்த முதல் காட்சியை கிளாப் அடித்து தொடங்கி வைத்தார் ராதிகா சரத்குமார். இப்படத்தை ஆர்.சரத்குமார், ஆர்.ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோரின் மேஜிக் ப்ரேம்ஸ் நிறுவனம் மற்றும் இயக்குனர் மனோபாலாவின் மனோபாலா பிக்சர் ஹவுஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

இப்படத்தை ஆடம் தாசன் என்ற புதுமுக இயக்குனர் இயக்குகிறார். அவர் கூறும்போது, என்னை இயக்குனராக அறிமுகபடுத்தும் தயாரிப்பாளர்களுக்கும், எனது குரு இயக்குனர் சங்கருக்கும் எனது நன்றிகள் என கூறினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries