டால்பி அட்மாஸ் சவுண்ட் எபெக்ட்டுடன் வெளியாகும் சகாப்தம்

b7d31db0-973c-41fe-9f98-a09e0c941a30_S_secvpfவிஜய்காந்த் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘சகாப்தம்’. இதில் சண்முக பாண்டியனுக்கு ஜோடியாக நேஹாஹிங், சுப்ராஜயப்பா நடிக்கின்றனர்.

ஜெகன், ரஞ்சித், சுரேஷ் ஆகியோரும் நடிக்கின்றனர். சுரேந்திரன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்.கே.சுதீஷ் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் மற்றும் திரையுலகின் பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இப்படத்தின் டிரெய்லர் தற்போது யூடியூபில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கடந்து வரவேற்பு பெற்று வருகிறது.

இப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வரும் நிலையில், தற்போது இப்படம் உயர்தர தொழில்நுட்பமான டால்பி அட்மாஸ் சவுண்ட் எபெக்ட்டில் வெளிவரவுள்ளது.

இத்தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தமிழில் ஒருசில படங்களே வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries