இது நம்ம ஆளு குழுவின் காதலர் தின பரிசு

ffc80a32-e460-4f63-b34b-a46212cf35c5_S_secvpfசிம்பு தற்போது நயன்தாராவுடன் இணைந்து ‘இது நம்ம ஆளு’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார். குறளரசன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் படத்தின் டீசர் வெளியானது. வெளிவந்த சில நாட்களிலேயே பெரிய அளவில் எல்லோருடைய கவனத்தையும் ஈர்ந்து முத்திரைப் பதித்தது.

இதனைத் தொடர்ந்து ரசிகர்களுக்கு காதலர் தின பரிசாக படத்தின் பிளூப்பர்ஸ் காட்சிகளை இன்று மாலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து இயக்குனர் பாண்டிராஜ் கூறும்போது, “படத்தின் டீசருக்கு ரசிகர்கள் கொடுத்த அதரவு எங்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அமைந்தது. ‘இது நம்ம ஆளு’ காதலை மையமாகக் கொண்ட படம். ஆதலால் காதலர் தின பரிசாக இந்த பிளூப்பர்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளோம்.

இந்த வீடியோவில் ஷூட்டிங் சமயத்தில் நடந்த சிறுசிறு தவறுகள், அதில் நாங்கள் மகிழ்ந்த விஷயங்கள் உள்ளடங்கியிருக்கும். அதேபோல் நம் உறவுகளின் மத்தியில் நடக்கும் சிறுசிறு தவறுகளை மறந்து மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை தொடர வேண்டும்” என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries