இவனுக்கு தண்ணில கண்டம் படத்தின் முதல் கட்டிங் வெளியீடு

4d209792-087a-4284-af71-d39914246ad6_S_secvpfதொலைக்காட்சி தொகுப்பாளர் தீபக் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘இவனுக்கு தண்ணில கண்டம்’. இதில் இவருக்கு ஜோடியாக நேஹா நடிக்கிறார். இவர்களுடன் பாண்டிய ராஜன், சுப்பு பஞ்சு, மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், சென்ட்ராயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு ஆர்.வெங்கடேசன்.

இப்படத்தை சின்னத்திரையில் நெடுந்தொடர்களை இயக்கிய எஸ்.என்.சக்திவேல் முதல் முறையாக பெரியதிரையில் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இப்படத்தை விவிஆர் சினிமாஸ்க் என்ற நிறுவனத்தின் சார்பில் வி.வெங்கட்ராஜ் தயாரித்திருக்கிறார். இப்படத்திற்கு தணிக்கை குழுவினர் படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் திரைப்படத்தின் முதல் கட்டிங் (டீசர்) இன்று அண்ணா பல்கலைக் கழகத்தின் டெக்கோபெஸ் Techofes நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. மேலும் “ஒரு எடிட்டர் படத்திற்காக முதலில் கட் செய்வது டீசர்தான். அதை மையமாக வைத்தே டீசருக்கு ‘முதல் கட்டிங்’ என்று பெயர் வைத்தோம். இது அனைவரையும் கவர்ந்துள்ளது” என்று குழுவினர் கூறுகின்றனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries