ஹரிதாஸ் இயக்குனரின் படத்தில் நடிக்கும் விக்ரம் பிரபு

d22ab8c4-4c7d-4dee-b60e-befa2e9d2e39_S_secvpfவிக்ரம் பிரபு தற்போது ‘இது என்ன மாயம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதை இயக்குனர் விஜய் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது இறுதிக்கப்பட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ‘வாகா’ என்ற புதிய படத்தில் நடிக்க விக்ரம் பிரபு ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்குகிறார். இவர் ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘ஹரிதாஸ்’ ஆகிய படங்களை இயக்கியவர்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று காரைக்குடியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 10 நாட்கள் அங்கு படப்பிடிப்பை நடத்தவுள்ளனர். இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

‘வெள்ளக்காரதுரை படத்திற்கு பிறகு மீண்டும் விக்ரம் பிரபு படத்திற்கு இசையமைக்கிறார் டி.இமான். இப்படத்தை விஜய் பார்கவி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries