நல்ல படம் என பெயர் வாங்கிய கள்ளப்படம்

1f262234-60c9-4959-a0e7-393473dbbab7_S_secvpfஇயக்குனர் மிஷ்கினிடம் உதவியாளராக பணியாற்றிய வடிவேல் இயக்கி நடிக்கும் படம் ‘கள்ளப்படம்’. இதில் லட்சுமி ப்ரியா கதாநாயகியாக நடிக்கிறார். இதில் நான்கு இளைஞர்கள் முக்கிய கேரக்டரில் அறிமுகமாகின்றனர். அதில் ஒருவர் வடிவேலு. இன்னொருவர் கே. இவர் இப்படத்துக்கு இசையும் அமைக்கிறார்.

இவர்கள் தவிர ஒளிப்பதிவாளர், எடிட்டர் ஆகியோரும் நடிக்கின்றனர். படத்தின் பிரதான தொழில்நுட்ப கலைஞர்கள் படத்தின் முக்கிய கேரக்டர்களில் நடிக்க இருப்பது இதுவே முதல் முறை.

நான்கு இளைஞர்கள், திரை உலகின் கதவும் தங்களுக்கு திறக்காதோ என்ற ஏக்கத்தில் எதிர்பார்த்து நிற்கும் அவர்களின் எதிர்கால கனவுகளையும் பற்றிய படமாக உருவாக்கியிருக்கிறார்கள்.

விறுவிறுப்பாக நடந்து முடிந்த இப்படத்தை தணிக்கை குழுவிற்கு அனுப்பியிருக்கின்றனர். படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது.

இப்படம் மார்ச் 13-ம்தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘லோன் உல்ப் புரொடக்‌ஷன்ஸ்’ சார்பில் மிஷ்கின் இப்படத்தை வெளியிடுகிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries