விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் ராஜ்கிரண்

e355a446-97d6-4dad-940f-41285b5ad35a_S_secvpfதனுஷ் தனது ‘வுண்டர்பார்’ நிறுவனம் மூலம் விஜய் சேதுபதியை வைத்து ‘நானும் ரௌடிதான்’ என்ற படத்தை தயாரித்து வருகிறார்.

இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் இதில் ராதிகா, ஆர்.ஜே.பாலாஜி, ஆனந்த்ராஜ், பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து வருகின்றனர். தற்போது இவர்களுடன் ராஜ் கிரணும் இணைந்துள்ளார்.

இப்படத்தில் ராஜ் கிரண் போலீஸ் வேடத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ‘மஞ்சப்பை’ படத்திற்குப் பிறகு ராஜ் கிரணுக்கு வித்தியாசமான வேடங்கள் வந்த வண்ணம் உள்ளது. தற்போது இவர் கார்த்தியுடன் இணைந்து நடித்துள்ள ‘கொம்பன்’ படம் விரைவில் வெளியாகவுள்ளது.

நானும் ரௌடிதான் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவை செய்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்னையின் முக்கிய இடங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries