சிவகார்த்திகேயனுக்கு இன்று பிறந்தநாள்: நடிகர்-நடிகைகள் வாழ்த்து

b533177b-a5ce-4b61-8c04-a92c6a179aa3_S_secvpfதமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். சென்ற வருடத்தில் இவர் நடித்த அனைத்து படங்களும் வெற்றி நடை போட்டது. இதனால், ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் நடிகர்களில் இவரும் ஒருவராக திகழ்கிறார்.

சிவகார்த்திகேயனுக்கு இன்று பிறந்தநாள். இவரது பிறந்தநாளையொட்டி தமிழ் சினிமாவின் பிரபல நடிகர், நடிகையர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

நடிகர்கள் தனுஷ், சதீஷ், இசையமைப்பாளர்கள் அனிருத், டி.இமான், தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, இயக்குனர்கள் துரை.செந்தில்குமார், பொன்ராம் உள்ளிட்டோர் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வருகிற பிப்.27-ந் தேதி ‘காக்கிச்சட்டை’ படம் வெளிவர இருக்கிறது. ‘காக்கிச்சட்டை’ படக்குழுவும் சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும், சிவகார்த்திகேயன் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘ரஜினிமுருகன்’ படக்குழுவும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளது.

இதையெல்லாம் தாண்டி, நடிகர் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் குழுவும் சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries