மூன்று தினங்களில் முப்பது கோடி – அனேகன் ஹேப்பி

1423731687-8751ஃபெப்ரவரி 13 ஆம் தேதி அனேகன் வெளியானது. அதற்கு அடுத்தநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் தொடக்கநாள். உலகக் கோப்பை கிரிக்கெட் நடக்கும் நாளில் படத்தை வெளியிடுவது தற்கொலைக்கு சமம். ஆனால், அனேகன் துணிச்சலாக வெளியானது.

முதல் மூன்று தினங்களில் அனேகன் உலக அளவில் 30 கோடிகளை வசூலித்துள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். இது அசாத்தியமான வசூல்.

இத்தனைக்கும் கடந்த ஞாயிறு அன்று இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் மேடச் யாரையும் டிவி முன்பிருந்து நகரவிடவில்லை. அப்படியிருந்தும் நல்ல கலெக்ஷனை அனேகன் பெற்றுள்ளது.

கே.வி.ஆனந்தின் கடைசிப் படம் மாற்றான் தோல்வியை தழுவியது. மாறாக அவரது பெற்றி பெற்ற அயன், கோ படங்களைப் போல் அனேகன் வசூலை குவித்து வருவதாகவும், கே.வி.ஆனந்தின் வெற்றிப்பட வரிசையில் அனேகனும் இணைந்துள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries