அனிருத்தின் எனக்கென யாருமில்லையே பாடல் கோவாவில் படமாகிறது

cf3db059-053c-43cf-8ff5-c6fcb52e0bf3_S_secvpfஅனிருத் இசையமைத்து வரும் புதிய படம் ‘ஆக்கோ’. இப்படத்தை புதுமுக இயக்குனர் ஷாம் குமார் இயக்கி வருகிறார். தீபன் பூபதி, ரதீஷ் வேலு ஆகியோர் ரெபெல் ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் இணைந்து தயாரிக்கின்றனர்.

இப்படத்தின் விளம்பரங்கள் பெரும்பாலும் அனிருத்தை மையப்படுத்தியே வெளியாகி வருகின்றன. இப்படத்தின் கதையை கேட்டு மிகவும் வியந்த அனிருத், இந்த படத்திற்காக மிகச் சிறந்த பாடல்களை இசையமைத்துக் கொடுத்துள்ளார்.

இப்படத்தில் இவருடைய இசையில் அமைந்துள்ள ‘எனக்கென யாருமில்லையே’ என்ற சிங்கிள் பாடலை காதலர் தின பரிசாக வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இதையடுத்து இந்த பாடலை கோவாவில் படமாக்கவுள்ளார்கள். இதன் படப்பிடிப்பு மார்ச் மாதம் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளது.

இதைப்பற்றி இயக்குனர் ஷாம் கூறும்போது, எனக்கென யாருமில்லையே பாடல் கோவாவின் சுற்று வட்டாரத்தில் படமாக்கவுள்ளோம். இதை விளம்பரப் பாடலாக உருவாக்க இருக்கிறோம். இந்தப் பாடல் படத்தின் இறுதியில் திரையிடப்படும் என்று கூறியுள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries