அஜித்துக்கு ஜோடியாக சமந்தா போய் சுருதி வந்தார்?

151565d3-d2e8-4db0-97d2-bcf936af18d6_S_secvpfஅஜித்தின் என்னை அறிந்தால் படம் ரிலீசாகி ஓடிக் கொண்டு இருக்கிறது. தற்போது அடுத்த படத்துக்கு தயாராகியுள்ளார். இந்த படத்தை சிவா இயக்குகிறார். இவர் ஏற்கனவே அஜித்தை வைத்து வீரம் படத்தை டைரக்டு செய்தவர். மீண்டும் புது படத்தில் இருவரும் இணைகிறார்கள்.

நகரம் சார்ந்த கதையம்சம் உள்ள ஆக்‌ஷன் படமாக தயாராகிறது.

இதில் அஜித் ஜோடியாக நடிக்க போவது யார் என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு ஏற்பட்டது. வித்யாபாலன், ஹன்சிகா, சமந்தா போன்றோர் பரீசிலிக்கப்பட்டனர். கடைசியாக சுருதி ஹாசனை தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுருதிஹாசன் ஏற்கனவே சூர்யா, விஷால், தனுசுடன் நடித்துள்ளார். தற்போது விஜய் ஜோடியாக புலி படத்தில் நடிக்கிறார்.

டைரக்டர் சிவாவிடம் இது குறித்து கேட்ட போது, ‘எல்லாமே இறுதி கட்டத்தில் உள்ளது. கதாநாயகி யார் என்ற விவரம் ஒரு வாரத்தில் அறிவிக்கப்படும்’ என்றார். இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries